மதுரையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் 5.76 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

Published Date: February 28, 2024

CATEGORY: CONSTITUENCY

ரூபாய் 5.76 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்:

மதுரையை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் 5.76 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிம்மக்கல் அருகே கலைஞரின் சிலை அமைந்துள்ளது. இப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரூபாய் 5.76 லட்சம் மதிப்பீட்டில் 6 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார். 

பின்னர் அவர் பேசியதாவது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை உறுதி செய்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மாதாந்திர உதவித்தொகை திட்டம், உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம், சுய தொழில் தொடங்கும் கடன் உதவி திட்டம், சக்கர நாற்காலி இணைப்பு, சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. .

இதன் மூலம் இப்பயனாளிகள் பிறர் துணை இன்றி சுயமாக அவர்கள் விரும்பும் இடத்திற்கு தன்னம்பிக்கையுடன் பயணிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. அடுத்த வாரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் பாண்டிசெல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Media: Dinakaran